600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; கடைக்காரர்களுக்கு அபராதம்


600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; கடைக்காரர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 17 Dec 2021 3:01 AM IST (Updated: 17 Dec 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

தடை செய்யப்பட்ட 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் நகர் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து நகராட்சி ஆணையர் குமரிமன்னன் தலைமையில் அதிகாரிகள் நேற்று கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 6 கடைகளில் இருந்து 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.14 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு, அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

Next Story