புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 17 Dec 2021 3:14 AM IST (Updated: 17 Dec 2021 3:14 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சிதிலமடைந்த கட்டிடம் 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா ஆ.தெக்கூர் கிராமத்தில் உள்ள தாய்-சேய் நலவிடுதி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? 
ராமச்சந்திரன், ஆ.தெக்கூர். 
பஸ் இயக்கப்படுமா? 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி-செக்கானூரணி டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இது சுற்று வட்டார பகுதி மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்து வந்தது. தற்போது இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி மீண்டும் இப்பகுதியில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
திலகர், உசிலம்பட்டி. 
உடைந்்த தண்ணீர் தொட்டி 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா அனுப்பங்குளம் கிராமம் ராமசாமிபுரத்தில் பிள்ளையார் கோவில் அருகில் தண்ணீர் ெதாட்டி உள்ளது. இது கட்டி பல ஆண்டுகள் ஆவதால் தற்போது ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது. எந்நேரமும் தண்ணீர் கசிந்து கொண்டிருக்கிறது. எனவே பழுதடைந்த தண்ணீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி அமைக்க வேண்டும். 
விநாயக மூர்த்தி, ராமசாமிபுரம்.  
திறக்கப்படாத சுகாதார நிலையம் 
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த உறங்கான்பட்டி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை இந்த கட்டிடம் திறக்கப்படவில்லை. மேலும் கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, இந்த துணை சுகாதார நிலைய கட்டிடத்தை திறக்க வேண்டும். 
எழில், உறங்கான்பட்டி. 
வீணாகும் குடிநீர் 
மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் விரகனூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சாலையின் நடுவில் தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தினமும் வீணாகி சாலையில் ஓடுகிறது. மேலும் சாலையில் உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
முருகேசன், விரகனூர். 
சாக்கடை கால்வாயில் அடைப்பு 
மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் 75-வது வார்டில் மைனர் தோப்பு தெருவில் பாதாள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். 
ராமசாமி, பழங்காநத்தம். 
மாணவர்கள் அவதி 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து ஆலங்குளம் வரும் அரசு நகர பஸ்கள் ஆலங்குளம் வராமல் முக்குரோட்டுடன் திரும்பி சென்று விடுகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பலரும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, பஸ்கள் ஆலங்குளத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஜெகநாதன், ஆலங்குளம். 
குடிநீர் குழாயில் உடைப்பு 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்மாப்பட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குறைந்த அளவிலேயே குடிநீர் கிடைக்கிறது. மேலும் அருகில் உள்ள பள்ளி மைதானத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மாணவர்களும் அவதியடைந்துள்ளனர். அதிகாரிகள் உடனடியாக குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய வேண்டும். 
ஆறுமுகம், திருப்பத்தூர். 
குண்டும், குழியுமான சாலை 
மதுரை மாநகரின் முக்கிய பகுதியான டவுன்ஹால் ரோடு பல மாதங்களாக குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெறுவதால் இப்படி உள்ளது கூறப்பட்டாலும், பல மாதங்களாக எந்த பணியும் நடக்காமல் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், மதுரை.   

Next Story