மரத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
சேரன்மாதேவியில் மாமனார் வீட்டுக்கு வந்த இடத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையில் மரத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
சேரன்மாதேவி:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பனவடலிசத்திரம் தெற்கு அச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை மகன் விஜயபாஸ்கர் (வயது 32). இவர் ஒரு மில்லில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.
இவருக்கும், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பக்தபிரியம் தெருவைச் சேர்ந்த குப்பையாண்டி மகள் தமிழ்செல்வி (30) என்பவருக்கும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சிவஸ்ரீ (1) என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் விஜயபாஸ்கருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர், சேரன்மாதேவியில் மாமனார் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார். மேலும் நெல்லையில் வேலைக்காக ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் குடும்பத்தினர் அவரை அக்கம்பக்கத்தில் தேடினர். நேற்று காலை சேரன்மாதேவி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள மரத்தில் விஜயபாஸ்கர் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார். மரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி போலீசார் அங்கு வந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தமிழ்செல்வி அளித்த புகாரின்பேரில், சேரன்மாதேவி இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
மாமனார் வீட்டுக்கு வந்த இடத்தில் தொழிலாளி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story