கல்குவாரி நீரில் மூழ்கி தொழிலாளி பலி
கல்குவாரி நீரில் மூழ்கி தொழிலாளி பலி
கொட்டாம்பட்டி
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள செக்கடிபட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 66). குவாரியில் கல் உடைக்கும் ெதாழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார்.
திருச்சுனையில் செயல்படாமல் உள்ள கல்குவாரி குட்டை அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று எதிர்பாராதவிதமாக கல்குவாரி குட்டையில் தவறி விழுந்துள்ளது.
ஆட்டின் சத்தம் கேட்டு பழனிசாமி குவாரியில் உள்ள நீரில் சென்று பார்த்தார். அப்போது அதில் விழுந்த ஆடு உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதையடுத்து ஆட்டுக்குட்டியை மீட்க பழனிசாமி அந்த குட்டையில் குதித்தார். பின்னர் அந்த ஆட்டை மீட்டு மேலே ஏற்றி விட்டார். ஆனால் பழனிசாமியால் கல்குவாரி நீரில் இருந்து கரை ஏற முடியவில்லை. அது ஆழமாக இருந்ததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கொட்டாம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைெதாடர்ந்து அவர்கள் விரைந்து வந்து நீரில் மூழ்கி இறந்த பழனிசாமியின் உடலை மீட்டனர்.
கொட்டாம்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story