பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையில் அரசு பஸ்சை வழிமறித்து விரட்டிய காட்டு யானை சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ


பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையில் அரசு பஸ்சை வழிமறித்து விரட்டிய காட்டு யானை சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ
x
தினத்தந்தி 17 Dec 2021 10:45 AM IST (Updated: 17 Dec 2021 10:45 AM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையில் அரசு பஸ்சை வழிமறித்து விரட்டிய காட்டு யானை சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

பென்னாகரம்:
கர்நாடக மாநிலத்தில் இருந்து காட்டு யானைகள் தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவது வழக்கம். கோடை காலம் முடிந்தவுடன் மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு திரும்பி சென்று விடும். இந்த நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்தும், தேன்கனிக்கோட்டை, ஓசூர் வனப்பகுதிகளில் இருந்தும் காட்டு யானைகள் ஒகேனக்கல்லுக்கு வந்துள்ளன
இந்த யானைகள் தற்போது ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உட்பட்ட  ராசிக்குட்டை, சின்னாறு ஆகிய பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் நாள்தோறும் பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையில் காலை, மாலை நேரங்களில் முண்டச்சி பள்ளம் என்ற இடத்தில் ரோட்டை கடந்து செல்கின்றன. இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் காட்டு யானை பென்னாகரத்தில் இருந்து அஞ்செட்டி செல்லும் அரசு பஸ்சை வழிமறித்தது. யானை வருவதை அறிந்த பஸ் டிரைவர் பஸ்சை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்னோக்கி இயக்கினார். ஆனால் காட்டு யானை திடீரென பஸ்சை நோக்கி விரட்டி வந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். 
இதையடுத்து குறிப்பிட்ட தூரம் வரை வந்த ஒற்றை யானை பின்னர் அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதை பார்த்த பின்னரே பஸ்சில் இருந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். காட்டு யானை பஸ்சை நோக்கி வந்ததை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Next Story