காட்பாடி ரெயில் நிலையம் அருகே அபாய சங்கிலியை இழுத்ததால் கோவை எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தம்


காட்பாடி ரெயில் நிலையம் அருகே அபாய சங்கிலியை இழுத்ததால் கோவை எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 17 Dec 2021 10:45 AM IST (Updated: 17 Dec 2021 10:45 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடி ரெயில் நிலையம் அருகே அபாய சங்கிலியை இழுத்ததால் கோவை எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது. தவறுதலாக பையை தொங்க விட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.

வேலூர்

காட்பாடி ரெயில் நிலையம் அருகே அபாய சங்கிலியை இழுத்ததால் கோவை எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது. தவறுதலாக பையை தொங்க விட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.

ரெயில் பாதியில் நிறுத்தம்

சென்னையில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 8 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது. பயணிகள் ஏறி இறங்கியதும் அங்கிருந்து புறப்பட்டது. ரெயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரெயிலில் டி-16 வது பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பயணிகள் இழுத்துள்ளனர். இதனால் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அபாய சங்கிலி இழுக்கப்பட்ட பெட்டிக்கு சென்று விசாரித்தனர். அதில் கோவை செல்லும் ஒரு குடும்பத்தினர் சங்கிலியை இழுத்தது தெரியவந்தது. அவர்களை ரெயிலை விட்டு கீழே இறக்கி விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

அபாய சங்கிலியில் தவறுதலாக பைகளை தொங்க விட்டதால் அபாயச் சங்கிலி தானாக இழுக்கப்பட்டது. இதனால் ரெயில் நின்று விட்டது. தங்களுக்கு அது அபாயசங்கிலி என்று தெரியாது என அவர்கள் கூறினர். 

இதனை தொடர்ந்து 15 நிமிடம் தாமதமாக கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. அபாய சங்கிலியை இழுத்த குடும்பத்தினரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து  விசாரணை நடத்தினர். 
இந்த சம்பவத்தால் காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story