முகவரி கேட்பதுபோல் நடித்து நகை பறித்த பெண்


முகவரி கேட்பதுபோல் நடித்து நகை பறித்த பெண்
x
தினத்தந்தி 17 Dec 2021 1:57 PM IST (Updated: 17 Dec 2021 1:57 PM IST)
t-max-icont-min-icon

சென்னை நந்தனம் குறுக்குத்தெருவில் முகவரி கேட்பதுபோல் நடித்து நகை பறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகர் 2-வது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் வனஜா (வயது 43). இவர், கடந்த 14-ந்தேதி வீட்டின் அருகே நடந்து சென்றபோது, அங்கு வந்த பெண் ஒருவர், வனஜாவிடம் முகவரி கேட்பதுபோல் நடித்தார். திடீரென அந்த பெண், வனஜா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட வனஜா, தங்கச் சங்கிலியை இறுக்கமாக பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து நகை பறிப்பில் ஈடுபட முயன்ற பெண்ணை மடக்கிப்பிடித்து, சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், நந்தனம் அண்ணாசாலையைச் சேர்ந்த ஹசீனா (37) என்பதும், குடும்ப கஷ்டம் காரணமாக நகை பறிப்பில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹசீனாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story