ஆண்டிப்பட்டி அருகே விவசாயிகள் உற்பத்தியாளர் குழு மையத்தில் கலெக்டர் ஆய்வு
ஆண்டிப்பட்டி அருகே உள்ள விவசாயிகள் உற்பத்தியாளர் குழு மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே பாலக்கோம்பையில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் மேகமலை கூட்டுப்பண்ணைய விவசாயிகள் உற்பத்தியாளர் குழு மையம் செயல்படுகிறது. இந்த மையத்தின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கு மாட்டுத்தீவனம் அரைத்தல், தானியங்கள் மற்றும் மிளகாய் உலர்த்தும் எந்திரம், மாவு அரைக்கும் எந்திரம் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் சண்முகசுந்தரபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டையையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதுபோல் ஆண்டிப்பட்டி, வடுகபட்டி, தென்கரை ஆகிய பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் அழகு நாகேந்திரன், வேளாண்மை பொறியியல் துறை துணை இயக்குனர் சங்கர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story