மார்கழி மாதத்தையொட்டி வீரராகவ பெருமாள் கோவில் நடை திறப்பு நேரம் மாற்றம்
மார்கழி மாதத்தையொட்டி வீரராகவ பெருமாள் கோவில் நடை திறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக தேவி பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இது 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த கோவிலுக்கு திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி செல்வர்.
தற்போது மார்கழி மாதத்தையொட்டி கோவிலின் நடை திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று முதல் ஜனவரி மாதம் 12-ந்தேதி வரை காலை 5 மணி முதல் 6 மணி, 7 முதல் 8 மணி, 9 மணி முதல் 12 வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
இந்தநேரத்தில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story