‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Dec 2021 9:13 PM IST (Updated: 17 Dec 2021 9:13 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தேங்கி கிடக்கும் கழிவுநீர்
நெல்லை மாநகராட்சி 19-வது வார்டு தியாகராஜநகர் வடக்கு 5, 6, 7-வது தெருக்களின் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் கசிந்து கடந்த ஒரு மாதமாக தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்து கழிவுநீரையும் அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
- கே.முத்து, தியாகராஜநகர்.

தெருவிளக்கு எரியுமா?
ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து ஆவுடையாள்புரம் மேற்கு பகுதியில் 4-வது தெருவில் மின்விளக்கு பல நாட்களாக எரியவில்லை. இரவு நேரத்தில் விஷப்பூச்சிகள் நடமாடும் இடமாக உள்ளதால் டியூசன் சென்று வரும் குழந்தைகள் மற்றும் வேலைக்கு சென்று வரும் பெண்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தெருவிளக்கு எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?
- ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

சேறும் சகதியுமான சாலை
நாங்குநேரி சுங்கச்சாசடி அருகே வரமங்கைபுரம் செல்லும் கிராமப்புற சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி.ஆறுமுகம், நாங்குநேரி.

சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி
பாளையங்கோட்டை தாலுகா வி.எம்.சத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கு அருகில் பயன்படாத நிலையில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இ்ந்த நீர்த்தேக்க தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாக சேதம் அடைந்த நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
- ம.சுரேஷ், வி.எம்.சத்திரம்.

தெருவின் நடுவில் மின்கம்பம்
நாங்குநேரி தாலுகா முனைஞ்சிப்பட்டி பஞ்சாயத்து கீரான்குளத்தில் சர்ச் தெருவில் சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் மின்கம்பத்தின் அடியில் காங்கிரீட் சேதமடைந்து சரியும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
- பாக்கியராஜ், கீரான்குளம்.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
அம்பை மெயின் ரோட்டில் ஆர்.எஸ். பஸ்நிறுத்தம், கல்யாணி திரையரங்கம் பஸ்நிறுத்தம், வண்டி மறித்தம்மன் கோவில் அருகே சந்தை பகுதி, பூக்கடை பஜார் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றன. சாலையின் குறுக்காக அடிக்கடி செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் நடக்கிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
- அம்ஜத், முதலியார்பட்டி. 

மின்விளக்கு வேண்டும்
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் மந்தியூர் பஞ்சாயத்து அகம்பிள்ளைகுளத்தில் இருந்து ரவணசமுத்திரம் ஆற்றுப்பாலம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலையில் மின்விளக்குகள் இல்லை. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த சாலை ஆற்றங்கரையோரம் அமைந்திருப்பதால் விஷ ஜந்துக்கள் அதிகளவில் நடமாடுகின்றன. எனவே சாலையில் மின்விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வேண்டுகிறேன்.
- கே.பாலச்சந்திரன், பிள்ளையார்குளம்.

குடிநீர் குழாயில் உடைப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பொன்னன்குறிச்சி அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சாத்தான்குளம், உடன்குடி, பெரியதாழை பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள மோட்டார் அறைக்கு எதிரே மெயின் குழாய் உடைந்து கடந்த 2 மாதங்களாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை அதிகாரிகள் கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சித்திரைவேல், ஸ்ரீவைகுண்டம்.

பஸ் நிறுத்தம் அமையுமா?
தூத்துக்குடி வாகைகுளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் வாகைகுளத்தில் இறங்கி தான் கல்லூரிக்கு வரும் நிலைமையில் உள்ளனர். எனவே கல்லூரி வாசலில் பஸ்நிறுத்தம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- எஸ்.உடையார், புதுக்கோட்டை.

Next Story