தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் மேலும் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 56 ஆயிரத்து 544 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று 5 பேர் முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை மொத்தம் 56 ஆயிரத்து 104 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 412 பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர்.
Related Tags :
Next Story