நாகையில், கோலப்பொடி விற்பனை மும்முரம்


நாகையில், கோலப்பொடி விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 17 Dec 2021 9:43 PM IST (Updated: 17 Dec 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

மார்கழி மாதத்தையொட்டி நாகையில் கோலப்பொடி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு வண்ணங்களில் கோலப்பொடிகளை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

நாகப்பட்டினம்:
மார்கழி மாதத்தையொட்டி நாகையில், கோலப்பொடி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு வண்ணங்களில் கோலப்பொடிகளை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
மார்கழி மாதம்
மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையில் எழுந்து தங்களின் வீடுகளின் முன்பு  பல வண்ணங்களிலான கோலப்பொடியில் கோலம் போடுவார்கள். இந்த கோலத்தில் சாணத்தினாலான பிள்ளையார் வைத்து வழிபடுவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
அதன்படி நேற்றுமுன்தினம் முதல் மார்கழி மாதம் தொடங்கியதையடுத்து நாகை மாவட்டத்தில் வீடுகள் முன்பு பெண்கள் விதவிதமான வண்ணங்களில் கோலமிட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபாடு நடத்தினர். கண்களை கவரும் வகையில் கோலங்கள் போடுவதால் வண்ண கோலப்பொடி விற்பனை சூடுபிடித்துள்ளது.
கோலப்பொடி விற்பனை
அதன்படி நாகை கடைத்தெருவில் கோலப்பொடி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. வண்ண வண்ண கோலப்பொடிகளை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதுதவிர நாகை நீலா வீதிகள், பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைத்து கோலப்பொடி விற்பனை நடைபெறுகிறது. 
கலர் கோலப்பொடிகள் சிறிய பாக்கெட் ஒன்று ரூ.5-க்கும், பெரிய பாக்கெட் ரூ.30-க்கும், வெள்ளை கோலப்பொடி பாக்கெட்டு ஒன்று ரூ.10-க்கும் விற்பனை செய்யபடுகிறது. அதேபோல  பெண்கள் அதிகாலை முதலே எழுந்து, குளித்து விட்டு காலையில் வீட்டு வாசலில் பல்வேறு வண்ணங்களில் கோலமிட்டு, அருகில் உள்ள கோவில்களுக்கு பஜனை பாட செல்கின்றனர்.

Next Story