திமுக அரசை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்


திமுக அரசை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2021 9:47 PM IST (Updated: 17 Dec 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

திமுக அரசை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

தி.மு.க. அரசை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து  திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணியன், சேவூர் ராமச்சந்திரன், எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். 

ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி பேசியதாவது:- 

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னார்கள். வீட்டில் குடும்ப தலைவிகளுக்கு ஊக்க தொகை வழங்குவோம் என்றும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்போம் என்று சொன்னார்கள், அதனை செய்தார்களா?, 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரணம் உடனே வழங்க வேண்டும் என்று கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அறிவுறுத்தினர். ஆனால் தி.மு.க. அரசு அதனை செய்யவில்லை. 

பொய் வழக்குகள்

அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் மீது தி.மு.க. அரசு பொய் வழக்குகளை போட்டு வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறது. ஆனால் அ.தி.மு.க.வின் தொண்டர்கள் மீது கூட சிறு கீறல்கள் போட முடியாது.

 பொங்கல் தொகுப்புகளுடன் ரொக்கத் தொகை வழங்கிய அரசு அ.தி.மு.க. அரசாகும். ஆனால் தி.மு.க. அரசு பொங்கல் தொகுப்புகளை மட்டுமே வழங்குவோம் என்று கூறுகிறார்கள். 

மேலும் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கை தி.மு.க. அரசு படிப்படியாக மூடி வருகிறது. 

இந்த செயலை நிறுத்த வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகின்ற சூழ்நிலை இருக்கிறது. மீண்டும் மக்களின் ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்.

 இவ்வாறு அவர் பேசினார். 

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகராட்சி, ேபரூராட்சி மற்றும் கட்சி நிர்வாகிகள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story