உளுந்து விதைப்பண்ணையில் அதிகாரி ஆய்வு


உளுந்து விதைப்பண்ணையில் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 17 Dec 2021 9:49 PM IST (Updated: 17 Dec 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

உளுந்து விதைப்பண்ணையில் அதிகாரி ஆய்வு

திருப்பூர்:
பயறு வகைகளில் அதிக மகசூல், அதிக லாபம் தரும் உளுந்து சாகுபடி விவசாயிகளின் முக்கிய தேர்வாக உள்ளது. அதிலும் தானியமாக இல்லாமல் விதையாக உற்பத்தி செய்து  விற்பனை செய்வது அதிக லாபம் கிடைக்கும். இதனால்  விதைப்பண்ணை அமைத்து  விதையாக உற்பத்தி  செய்ய விவசாயிகளிடம் ஆர்வம் அதிகரித்து உள்ளது. உடுமலை  வட்டாரத்திற்கு உட்பட்ட தும்பலப்பட்டி, கண்ணமநாயகனூர், ஆண்டிய கவுண்டனூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து விதை பண்ணைகளை திருப்பூர் மாவட்ட விதை சான்று மற்றும் அங்ககச் சான்று  உதவி இயக்குனர் மாரிமுத்து  ஆய்வுசெய்தார். 
அப்போது அவர் கூறும்போது “விதைப்பண்ணைகள்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பிற ரக கலவன் நீக்கப்பட்டு  அறுவடைக்கு அனுமதிக்கப்படும்.  இந்த விதைகள்  அரசு அங்கீகாரம்  பெற்ற விதை சுத்தி நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு,  முளைப்புத்திறன்,  பிறரக கலவன், ஈரப்பதம், புறத்தூய்மை பகுப்பாய்வு செய்யப்படும்.  பின்னர் விதை தரத்தில் தேர்ச்சி பெற்ற விதை குவியல்கள்   விதை சான்று  அலுவலர்களால்  சான்று  செய்யப்பட்டு தரமான சான்று விதைகளான வினியோகம் செய்யப்படுகிறது.  உடுமலை பகுதியில்  தற்போது வம்பன்- 8 ரக உளுந்து விதைப்பண்ணைகள் ஆய்வு செய்யப்பட்டு  கலவன் நீக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் தை பட்டத்திற்கு வினியோகம் செய்ய விதை சான்று பணிகள்  மேற்கொள்ளப்படுகிறது என்றார். ஆய்வின்போது விதை சான்று அலுவலர் சர்மிளா உடன் இருந்தார். 

Next Story