5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 17 Dec 2021 9:52 PM IST (Updated: 17 Dec 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க  செல்லவில்லை.
கடல் சீற்றம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மாகதேவி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட  மீனவ கிராமங்களில் விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். 
 கடந்த மாதத்தில் பெய்த தொடர் மழையாலும், கடல் சீற்றமாக காணப்பட்டதாலும் மீனவர்கள் 10 நாட்களுக்கும் மேலாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். 
மீன்பிடிக்க செல்லவில்லை
பின்னர் மழை  நின்றவுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் நேற்று கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டதால் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இதனால் மீனவர்கள் ஆயிரத்துக்கும் படகுகளை பாதுகாப்பாக கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்தனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை வெறிச்சோடி கிடந்தது.

Next Story