சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியவர் கைது
சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
தொண்டி,
தொண்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்ட ராக பணிபுரிந்து வருபவர் காசி. இவர் சம்பவத்தன்று தொண்டி செய்யது முகம்மது அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தாராம். அப்போது தொண்டியில் இருந்து திருவாடானை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதை ஓட்டிச்சென்ற தொண்டி வெள்ளை மணல் தெரு பகுதியை சேர்ந்த ராஜா (வயது44) என்பவரிடம் மோட்டார் சைக்கிள் லைசென்ஸ் மற்றும் ஆர்.சி.புக் போன்றவற்றை காண்பிக்குமாறு கேட் டுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த ராஜா சப்- இன்ஸ்பெக்டர் காசியை தரக்குறைவாக பேசி மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தார்.
Related Tags :
Next Story