வாலிபர் கைது
புகையிலை பொருட்களுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தொண்டி,
தொண்டி அருகே திருவெற்றியூர் செல்லும் விலக்கு சாலையில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் -இன்ஸ்பெக்டர் காசி மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற காரை போலீசார் சோதனையிட்டுள்ளனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட் கள் 92 பார்சலாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து அவற்றை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக திருவாடானை தாலுகா மடத்தேந்தல் கிராமத்தை சேர்ந்த சுப்பையா (வயது38) என்பவரை போலீசார் கைது செய்தனர். புகையிலைப் பொருட்களை ஏற்றிச்சென்ற காரை பறிமுதல் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story