மாநகராட்சிக்கு வாடகை பாக்கி; போக்குவரத்து கழக அலுவலகம், கடைகளுக்கு பூட்டு


மாநகராட்சிக்கு வாடகை பாக்கி; போக்குவரத்து கழக அலுவலகம், கடைகளுக்கு பூட்டு
x
தினத்தந்தி 17 Dec 2021 10:16 PM IST (Updated: 17 Dec 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சிக்கு வாடகை பாக்கி செலுத்தாததால் திண்டுக்கல் போக்குவரத்துக்கழக அலுவலகம் மற்றும் கடைகளுக்கு பூட்டு போடப்பட்டது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ் நிலையத்தில், மாநகராட்சி கட்டிடத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் விசாரணை அலுவலகம் செயல்படுகிறது. இதற்கு மாநகராட்சி நிர்வாகத்துக்கு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வாடகை செலுத்த வேண்டும். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை என்று தெரிகிறது. அந்த வகையில் ரூ.9 லட்சம் வரை வாடகை பாக்கி இருந்தது. இதேபோல் 3 கடைகளுக்கும் வாடகை செலுத்தப்படாமல் நிலுவை இருந்தது.
இதையடுத்து மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்பின்னரும் வாடகை தொகையை செலுத்தவில்லை. இதைத் தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக விசாரணை அலுவலகம் மற்றும் 3 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டினர். அரசு போக்குவரத்து கழக விசாரணை அலுவலகம் பூட்டப்பட்டதால், பஸ் போக்குவரத்து பற்றி அறிய முடியாமல் பயணிகள் தவித்தனர்.


Next Story