தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Dec 2021 10:20 PM IST (Updated: 17 Dec 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயணிகள் நடைபாதை ஆக்கிரமிப்பு
பழனி பஸ் நிலையத்தில் கடைகள் வைத்திருப்பவர்கள் பயணிகள் நடந்து செல்வதற்காக உள்ள பாதையை ஆக்கிரமித்து அதில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அழகு, பழனி.
செயல்படாத மின்மோட்டார்
கூடலூர் 6-வது வார்டு அருந்ததியர் நடுத்தெருவில் ஆழ்துளை கிணறு மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் மின்மோட்டார் கடந்த 4 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி தவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, கூடலூர்.
பயன்படாத மேல்நிலை குடிநீர் தொட்டி
பழனியை அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சி குதிரையாறு அணை அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கடந்த பல ஆண்டுகளாக பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் பக்கத்து ஊர்களுக்கு சென்று தண்ணீர் எடுத்துவரும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமகிருஷ்ணன், பழனி.
பாதியில் நிறுத்தப்பட்ட சுரங்கப்பாதை பணி
வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் இருந்து நல்லமனார்கோட்டை செல்லும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அதன் பின்னர் அந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சுரங்கப்பாதை பணியை மீண்டும் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செழியன், வேடசந்தூர்.
தண்ணீர் தொட்டி சேதம்
தேனியை அடுத்த ஊஞ்சாம்பட்டி 2-வது வார்டு வடக்கு தெருவில் இருந்து வடபுதுப்பட்டி செல்லும் சாலையில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி சேதமடைந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேல், ஊஞ்சாம்பட்டி.
வீடுகள் முன்பு தேங்கும் கழிவுநீர்
திண்டுக்கல் பி.டபுள்யூ.டி.காலனியில் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உறிஞ்சுகுழியில் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் உறிஞ்சுகுழியில் கழிவுநீர் வழிந்தோடாமல் வீடுகள் முன்பு தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அல்போன்ஸ், ரோஜாதெரு.

Next Story