நெல்லிக்குப்பத்தில் தகுதியான தொழிலாளர்கள் யார்-யார்?


நெல்லிக்குப்பத்தில் தகுதியான தொழிலாளர்கள் யார்-யார்?
x
தினத்தந்தி 17 Dec 2021 10:23 PM IST (Updated: 17 Dec 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலையை நகராட்சியிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் நெல்லிக்குப்பத்தில் தகுதியான தொழிலாளர்களை தேர்வு செய்வதற்காக வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெல்லிக்குப்பம், 

இந்தியா முழுவதும் கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பபு திட்டம்(100 நாள் வேலை திட்டம்) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பயன்யடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தை  நகராட்சியிலும் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. 
அதன்படி நெல்லிக்குப்பம் நகராட்சியில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி தலைமையில் நகராட்சி பொறியாளர் பாண்டு, துப்புரவு அலுவலர் சக்திவேல் மேற்பார்வையில் 40 ஊழியர்கள், நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று அங்குள்ளவர்களின் ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், என்ன வேலை செய்கிறார்கள், அவர்களுடைய வருமானம் உள்ளிட்டவைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

விரைவில் வேலை

கணக்கெடுப்பு விபரம் குறித்த தகவல் உடனடியாக ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு தகுதியுடைய தொழிலாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு விரைவில் 100 நாள் வேலை வழங்கப்படும்.
இந்த திட்டம் செயல்படுத்துவதன் மூலம் கிராம மக்களை போல் நகர்ப்புற மக்களும் பயன் அடைவார்கள். இந்த திட்டம் கடலூர் மாவட்டத்திலேயே நெல்லிக்குப்பத்தில் தான் முதன் முறையாக செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story