மயிலாடுதுறையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


மயிலாடுதுறையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2021 10:26 PM IST (Updated: 17 Dec 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. அரசை கண்டித்து மயிலாடுதுறையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை:
தி.மு.க. அரசை கண்டித்து மயிலாடுதுறையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை உடனே குறைக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகையும், பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகையும் வழங்க வேண்டும். அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும். அம்மா மினி கிளினிக்குகளை மூடக்கூடாது. அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், மாவட்ட துணை செயலாளர் செல்லையன், தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெங்கநாதன், சக்தி, நடராஜன், பூராசாமி, நகர செயலாளர் செந்தமிழன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story