காங்கேயம் அருகே பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பஸ்களில் ஏறிச் செல்வது பற்றி போக்குவரத்துதுறையினர் நடவடிக்கை
காங்கேயம் அருகே பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பஸ்களில் ஏறிச் செல்வது பற்றி போக்குவரத்துதுறையினர் நடவடிக்கை
காங்கேயம்
காங்கேயம் அருகே பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பஸ்களில் ஏறிச் செல்வது பற்றி போக்குவரத்துதுறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மாணவர்கள்
பள்ளி மாணவ, மாணவியர் பள்ளி நேரம் முடிந்தவுடன் தங்களின் ஊருக்கு செல்ல முண்டியடித்துக் கொண்டு பஸ்களில் ஏறிச் செல்லும் நிலை உள்ளது. மேலும் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்வது உள்ளிட்ட காரணங்களினால் விபத்துக்கள் நேர்ந்து மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே போக்குவரத்து துறையினர் அந்தந்த பணிமனை சார்ந்த இடங்களில் செயல்படும் பள்ளிகளின் அருகே உள்ள பஸ் நிறுத்தங்களில் நின்று மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். அதன்படி பஸ் நிறுத்தத்தில் மாணவர்களை வரிசைப்படுத்துவது, பஸ் வந்தவுடன் மெதுவாக ஏறிச்செல்லவும், பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லக் கூடாது என அறிவுரை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.
படியூர்
அதன்படி நேற்று காங்கேயம் அடுத்துள்ள படியூர் பஸ் நிறுத்தத்தில் அரசு போக்குவரத்து கழக காங்கேயம் பணிமனை ஓட்டுனர் பயிற்றுனர் மணிகண்டன், உதவி இன்ஜினியர் பார்த்தீபன் ஆகியோர் மாணவர்களை வரிசையில் நிற்க வைத்தும், படிக்கட்டுகளில் தொங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விளக்கிக் கூறினர். தொடர்ந்து அனைத்து பள்ளிகளின் முன்பும் இதுபோன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றனர்.
Related Tags :
Next Story