பனங்கிழங்கு சீசன் தொடங்கி விட்டதால் தாராபுரத்தில் பனங்கிழங்கு விற்பனை ஜோராக நடந்துவருகிறது


பனங்கிழங்கு சீசன் தொடங்கி விட்டதால் தாராபுரத்தில் பனங்கிழங்கு விற்பனை ஜோராக நடந்துவருகிறது
x
தினத்தந்தி 17 Dec 2021 10:30 PM IST (Updated: 17 Dec 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

பனங்கிழங்கு சீசன் தொடங்கி விட்டதால் தாராபுரத்தில் பனங்கிழங்கு விற்பனை ஜோராக நடந்துவருகிறது

தாராபுரம், 
பனங்கிழங்கு சீசன் தொடங்கி விட்டதால் தாராபுரத்தில் பனங்கிழங்கு விற்பனை ஜோராக நடந்துவருகிறது. 
பனங்கிழங்கு
கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுகின்ற பனை மரம் அதிக காலம் உயிர் வாழும் தன்மை கொண்டது. இயற்கை, மனித குலத்துக்கு கொடுத்த அரிய கொடை பனைமரம். அதில் இருந்து கிடைக்கக்கூடிய பதனீர், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, பனை நார் என அனைத்து பொருட்களும் பயன்தரக்கூடியது. அந்த வகையில் பனைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பனங்கிழங்கு தற்போது தாராபுரத்தில் கடைவீதி, உடுமலை ரோடு, தாலுகா அலுவலகம் அருகில், அண்ணாசிலை அருகில் என அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.அதனை ஏராளமான பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனா்.
இதுகுறித்து தாராபுரத்தை சோ்ந்த வியாபாாி ஒருவா் கூறியதாவது:-
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீர் உடல் ஆரோக்கியத்தை காக்கும் ஊட்டச்சத்து பானம் ஆகும். பனம்பழத்தை குழியில் போட்டு புதைத்து, பனங்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. 2 முதல் 3 மாதங்ககளில் அந்த பனம்பழத்தில் இருந்து பனங்கிழங்கு வளா்ந்து வருகிறது. 10 பனங்கிழங்கு கொண்ட ஒரு கட்டின் விலை ரூ.80விற்கப்படுகிறது. 
சுவை மிகுதி
 மேலும் குழியில் இருந்து பனங்கிழங்கை எடுக்கும்போது பனை விதையில் இருந்து தவின் கிடைக்கிறது. இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.பனங்கிழங்கு, பதனீர், நுங்கு, பனம்பழம், பனை ஓலை, பனை நார் என பனைமரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்தும் மனித குலத்திற்கு பயன் தரக்கூடியதாகும். குன்னத்தூா் மற்றும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், நம்பியூா் ஆகிய பகுதிகளில் இருந்து தற்போது பனங்கிழங்கு விற்பனைக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story