திருட்டு வழக்குகளில் வாலிபர் கைது
திருட்டு வழக்குகளில் வாலிபர் கைது
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் அவினாசி ரோடு அம்மாபாளையம் போலீஸ் சோதனை சாவடியில் திருமுருகன்பூண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ÷ தலைமையில் போலீசார் உள்ளிட்டோர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த வாலிபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மணி என்பவரின் மகன் ஜெயக்குமார் (வயது 28) என்பது தெரிய வந்தது. மேலும் கடந்த 11-ந்தேதி திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியாபாளையம் சிவாநகரில் சுரேஷ் என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து அரை பவுன் சங்கிலி மற்றும் அரை பவுன் கம்மலை திருடி சென்றவர் என்பது தெரிந்தது. இதேபோல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாவிபாளையம் பகுதியில் வில்சன் பிராங்களின் என்பவருக்கு சொந்தமான பி.வி.சி. கதவு, ஜன்னல் கடையில் மேற்கூரையை பிரித்து ரூ.6 ஆயிரத்தை திருடி சென்றதையும் ஜெயக்குமார் ஒப்புக்கொண்டார். மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் ஜெயக்குமார் மீது திருவள்ளூர், ராணிப்பேட்டை, அரக்கோணம் உள்பட பல்வேறு 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story