ராணிப்பேட்டையை தற்கொலைகள் இல்லாத மாவட்டமாக மாற்ற ‘ஒரு வாழ்வு - ஒரு அழைப்பு’ அறிமுகம்
தற்கொலைகள் இல்லாத மாவட்டமாக மாற்ற ‘ஒரு வாழ்வு - ஒரு அழைப்பு’
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தை தற்கொலைகள் இல்லாத மாவட்டமாக உருவாக்கும் நோக்கத்தோடு ‘ஒரு வாழ்வு - ஒரு அழைப்பு’ என்ற முறை ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது :-
ராணிப்பேட்டை மாவட்டத்தை தற்கொலைகள் இல்லாத மாவட்டமாக உருவாக்கும் நோக்கோடு இவை தொடங்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பிரச்சினைக்காக்கவும் மனம் உடைந்து விலை மதிப்பில்லா மனித உயிர்கள் தற்கொலை மூலமாக போகக்கூடாது. மேலும் மன அழுத்தம், பிற பிரச்சினைகளால் தற்கொலைக்கு முயலும் எண்ணம் தோன்றும். அவர்களுக்கு தகுந்த நிபுணர்கள் மூலம் ஆறுதல், ஆலோசனை வழங்கப்படும். அவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 7540069444, 7540070555 ஆகிய 2 உதவி போன் எண்கள் அறிமுகம் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துக்கருப்பன், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story