மாட்டு வண்டி பந்தயம்
சிங்கம்புணரி அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே எஸ். வையாபுரி பட்டியில் உள்ள சிறைமீட்ட அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி தமிழ்நாடு ஏறுதவுழுதல் நலச் சங்கம் சார்பாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 12 ஜோடி மாடுகள் பங்கேற்றன. ஆறுமுகம் பூமிநாதன் பந்தயத்தை தொடங்கி வைத்தார். போட்டியில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டி பந்தயத்தின் இறுதியில் முதல் பரிசை சிங்கம்புணரி காஞ்சனா தேவி, அஜ்மல்கான் வண்டியும், 2-வது பரிசை தெற்குப்பட்டி விபிலன் வண்டியும், 3-வது பரிசை சிங்கம்புணரி யாஷிகா வண்டியும், 4-வது பரிசை சிங்கம்புணரி செந்தில்குமார், 5-வது பரிசை காரைக்குடி இனியா ஆகிய மாட்டு வண்டிகள் பெற்றன. வெற்றிபெற்ற வண்டியின் உரிமையாளர்களுக்கு ஏறுதழுவுதல் சங்க மாவட்ட தலைவர் வைரமணி, கூட்டுறவு சங்க தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். ஏற்பாடுகளை மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேசன், அரசு, பிரபாகரன், கார்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story