ஜோலார்பேட்டை அருகே பெண் இன்ஸ்பெக்டரிடம் நகை பறித்த வாலிபர் 5 மாதங்களுக்கு பிறகு சிக்கினார்


ஜோலார்பேட்டை அருகே  பெண் இன்ஸ்பெக்டரிடம் நகை பறித்த வாலிபர் 5 மாதங்களுக்கு பிறகு சிக்கினார்
x
தினத்தந்தி 17 Dec 2021 11:18 PM IST (Updated: 17 Dec 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே பெண் இன்ஸ்பெக்டரிடம் 7 பவுன் நகை பறித்த வழக்கில் 5 மாதங்களுக்கு பிறகு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே பெண் இன்ஸ்பெக்டரிடம் 7 பவுன் நகை பறித்த வழக்கில் 5 மாதங்களுக்கு பிறகு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின்பேரில் விசாரணை

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கைகரசி, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் தாமலேரிமுத்தூர் பகுதியில் ரோந்து சென்றபோது சுற்றித் திரிந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி உள்ளார். 

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் ஆம்பூரை அடுத்த நியூ தத்தளகம் பகுதியை சேர்ந்த முபாரக் அலி என்பவருடைய மகன் அசார் என்கிற அசாருதீன் (வயது 31) என்பது தெரியவந்தது. கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி திருப்பத்தூர் மாவட்ட கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் புனிதா (47) என்பவர் பணி முடிந்து இரவு வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது அவரிடம் 7 பவுன் தாலிசெயினை பறித்ததை அசாருதீன் ஒப்புக்கொண்டார். 

மளிகைக்கடை உரிமையாளர்

மேலும் ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் பகுதியை சேர்ந்த அண்ணாமலை மனைவி சசிகலா (42) கடந்த 10-ந்் தேதி இரவு திருப்பத்தூர் பகுதியில் உள்ள மளிகைக் கடையை பூட்டி விட்டு தனது மகள் மோனிகாவுடன் மொபட்டில் சென்றபோது பாச்சல் மேம்பாலம் அருகே சசிகலா கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் செயினை பறித்ததையும் ஒப்புக்கொண்டார். 

இதனையடுத்து அசாருதீனை கைது செய்து, திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 11 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
பெண் இன்ஸ்பெக்டரிடம் நகைபறித்து தலைமறைவாக இருந்த அசாருதீன் 5 மாதங்களுக்கு பிறகு பிடிபட்டுள்ளார்.

Next Story