ஆம்பூர் பகுதியில் விபத்துகளை தவிர்க்க மேம்பாலம். அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
ஆம்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் கட்டப்பட உள்ளதை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
ஆம்பூர்
ஆம்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் கட்டப்பட உள்ளதை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
ஆம்பூர் நகர தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக புதிதாக அமையவுள்ள மேம்பால பணிகள் மற்றும் ரெட்டிதோப்பு பகுதியில் அமைய உள்ள மேம்பால பணிகள் குறித்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆம்பூரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேம்பாலம்
ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதியில் நீண்ட நாட்களாக இப்பகுதி மக்கள் மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைத்திருக்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலை ஆம்பூர் நகரப்பகுதியில் இருப்பதால் விபத்துகள் அதிகமாக நடைபெறுகிறது. பல்வேறு அரசு பணிகள் சார்பாக நான் இந்தப் பகுதியில் செல்லும் போதெல்லாம் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள். அதன் அடிப்படையில் மத்திய மந்திரி நிதின் கட்கரியிடம் இது சம்பந்தமாக பல்வேறு கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்போது ஆம்பூரில் மேம்பாலம் அமைப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட சுமார் 1.400 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கப்படும். அதுவும் 6 வழிச் சாலையாக அமைக்கப்படும். ஜனவரி மாதம் இறுதியில் திட்ட மதிப்பு எல்லாம் தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இங்கு மேம்பாலம் அமைக்கப்படுவதால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.
ரெட்டித்தோப்பு
ரெட்டித்தோப்பு பகுதி மக்கள் இந்த நகரப்பகுதிக்கு வரவேண்டும் என்று சொன்னால் ெரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்தி தான் வரவேண்டும். மழைக்காலங்களில் அதில் இடுப்பளவு தண்ணீர் வருவதால் பொதுமக்கள் வரமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மாநில அரசாங்கம் மூலமாக பைபாஸ் சாலை அமைக்கப்பட்டு குறிப்பாக ரெயில் நிலையம் பக்கத்தில் 650 மீட்டர் பாலம் அமைத்து அந்தப் பகுதி மக்கள் நகர பகுதிக்கு செல்ல அந்தத் திட்டமும் நடைபெற உள்ளது. ஒரே நேரத்தில் 2 மேம்பால பணிகள் நடைபெறும். இந்த ஆண்டு ரெட்டித்தோப்பில் புறவழிச்சாலை, ெரயில்வே பாலம் அமைக்கப்படும். அது அமைத்துவிட்டால் ஆம்பூர் மக்களுக்கு எந்த விதமான விபத்தும் ஏற்படாது.
இவ்வாறு தெரிவித்தார்.
எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, வில்வநாதன், ஆம்பூர் நகர தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர் லோகநாதன், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் அதிபதி மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story