தீயில் எரிந்து வீடு நாசம்
மன்னார்குடியில் தீயில் எரிந்து வீடு நாசமடைந்ததில் ரூ.1 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.
மன்னார்குடி;
மன்னார்குடியில் தீயில் எரிந்து வீடு நாசமடைந்ததில் ரூ.1 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.
மேற்கூரையில் தீப்பிடித்தது
மன்னார்குடி கீழ 2-ம் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது58). நேற்று முன்தினம் இரவு ராஜசேகர் மற்றும் அவரது மனைவி தங்களது ஓட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டின் சமையல் அறையில் பகுதியில் இருந்து கருகிய வாடை வந்தது. இதனால் சந்தேகமடைந்த ராஜசேகர் சமையல் அறைக்கு சென்று பார்த்த போது வீட்டின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராஜசேகர் தனது மனைவியை அழைத்து கொண்டு வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்தார். மேலும் இது குறித்து
மன்னார்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
ரூ.1 லட்சம் பொருட்கள்
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மன்னார்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் ராஜசேகரின் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. தீ விபத்தில் வீட்டில் இருந்த பிரிட்ஜ், கிரைண்டர், சமையல் பாத்திரங்கள், வீட்டின் மேற்கூரை உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story