2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
வேலை நிறுத்த போராட்டம்
வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் பொதுத்துறை வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூரிலும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. மேலும் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏ.டி.எம். மையங்களில் கூட்டம்
வேலை நிறுத்தம் காரணமாக வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வங்கிகளுக்கு நேரடியாக சென்று பணம் செலுத்த முடியாமலும், பணத்தை எடுக்க முடியாமலும், காசோலை பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாமலும் வாடிக்கையாளர்கள் தவித்தனர்.
2 நாட்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஏ.டி.எம். மையங்களை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் காணப்பட்டது. பொதுத்துறை வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தாலும், தனியார் வங்கிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டன.
Related Tags :
Next Story