நெமிலி அருேக காதல் விவகாரத்தால் வாலிபர் குத்திக்கொலை
நெமிலி அருேக காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முன்விரோதத்தில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டாா்.
நெமிலி
நெமிலி அருேக காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முன்விரோதத்தில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டாா். இதுதொடர்பாக தனியார் பஸ் டிரைவர் உள்பட 5 ேபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண் தற்கொலை
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த மகேந்திரவாடி கிராமம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த லட்சுமணனின் மகன் சக்திவேல் (வயது 22), பொக்லைன் டிரைவர்.
அதே கிராமத்தைச் சேர்ந்தவரும் தனியார் பஸ் டிரைவருமான அருள் என்பவரின் மகள் அனிதாவை ஒரு ஆண்டுக்கு முன்னர் சக்திவேல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிய வந்தது. இதனால் அனிதாவை ெபற்றோர் கண்டித்தனர். மனமுடைந்த அனிதா விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சக்திவேல் மீது விரோதம் ஏற்பட்டது.
பஸ்சை மோத விட்டார்
கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி மகேந்திரவாடி-வேடந்தாங்கல் சாலையில் அருள் வழக்கமாக தனியார் பஸ்ைச ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சக்திவேலும் வந்து கொண்டிருந்தார்.
இதை சாதகமாகப் பயன்படுத்தி பழித்தீர்க்க நினைத்த அருள் ஓரிடத்தில் திடீெரன சக்திவேல் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பஸ்சை மோத விட்டு விபத்தை ஏற்படுத்தினார். அதில் சக்திேவலின் வலது கால் முழுவதுமாக முறிந்து, இடது கால் பாதம் மட்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறியிருந்தார். இருப்பினும், சக்திவேல் தற்போது வீட்டில் சும்மா இல்லாமல் பொக்லைன் எந்திரத்தை ஓட்டி வந்தார். ஆனால் இருவருக்கும் இடையேயான பகை நீடித்தது.
சரமாரியாக கத்திக்குத்து
நேற்று முன்தினம் இரவு சக்திவேல் பொக்லைன் எந்திரத்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது அருளின் வீட்டுச்சுற்றுச்சுவரை பொக்லைன் எந்திரம் இடித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அருள், மகன் தினேஷ் உள்பட 5 ேபர் சேர்ந்து சக்திவேல் ஓட்டி வந்த பொக்லைன் எந்திரத்தை பின்தொடர்ந்து விரட்டிச் சென்று சிறுவளையம் கிராமம் அருகே மடக்கி தகாத வார்த்தைகளால் பேசி திட்டினர்.
ஆத்திரம் அடங்காத 5 பேரும் சக்திவேலின் இடது பக்க முகம் மற்றும் இரு கைகளில் கத்தியால் சரமாரியாக குத்தியும், கற்களால் தாக்கியும், சக்திவேல் ஓட்டி வந்த பொக்லைன் எந்திரத்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் 5 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
வலைவீச்சு
அதில் படுகாயம் அடைந்த சக்திவேலை அங்கிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது உறவினர் செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில் நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக டிரைவர் அருள், மகன் தினேஷ் உள்பட 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story