ஜீன்ஸ் ஆடை அணிந்த விவகாரம்: ஆசிரியர் விளக்கம் அளிக்க அதிகாரி உத்தரவு
ஜீன்ஸ் ஆடை அணிந்த விவகாரம் தொடர்பாக ஆசிரியர் விளக்கம் அளிக்க அதிகாரி உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் மேலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி துறை நாட்டுநலப்பணி திட்ட இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பட்டதாரி ஆசிரியர் குமார் என்பவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர்கள் ஆடை அணிவது தொடர்பாக ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்ட நிலையில் ஆசிரியர் குமார் ஜீன்ஸ் பேண்ட் அணிந்தது குறித்து விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி தலைமை ஆசிரியரும் விளக்கமளித்து முதன்மை கல்வி அதிகாரியை சந்திக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story