தொற்றுநோய் பரவும் அபாயம்
தொற்றுநோய் பரவும் அபாயம்
நாகை மாவட்டம் திட்டச்சேரி பஸ் நிலையம் அருகில் குப்பை மற்றும் கழிவுகள் பல மாதங்களாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மழை தண்ணீரும் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படும் அபாய நிலை உள்ளது. அந்த சாலை வழியே செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் துர்நாற்றத்தால் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
னியவன்திட்டச்சேரி
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சி அண்டர் காடு கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் பல வருடங்களாக மேலாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது.குடிநீருக்காக அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் இதுநாள்வரை தண்ணீர் கிடைக்க வில்லை. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடித்து இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக 4 கி.மீ தூரம் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி கட்டிமுடிக்கப்பட்ட குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story