தி.மு.க அரசை கண்டித்து வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வேலூர்
தி.மு.க. அரசைக் கண்டித்து வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு தலைமை தாங்கினார். தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல செயலாளர் ஜனனீ பி. சதீஷ்குமார், மாவட்ட அவைத்தலைவர் எம்.ஆர்.ரெட்டி, துணைச்செயலாளர் ஜெயப்பிரகாசம், வேலூர் தொகுதி முன்னாள் செயலாளர் சி.கே.சிவாஜி, காட்பாடி ஒன்றிய செயலாளர் கே.எஸ். சுபாஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் ரவிபாபு, சுகன்யாதாஸ், பகுதி செயலாளர்கள் எஸ்.குப்புசாமி, பேரவை ரவி, ஜெய்சங்கர், பி. நாராயணன், மாவட்ட அணி செயலாளர்கள் அமர்நாத், எஸ்.பி.ராகேஷ், ஆர்.சுந்தரராஜி, எம்.ஏ.ராஜா, ரகு, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளர்கள் கே.ஆர். ரவி, கே.பி.ரமேஷ், வட்ட செயலாளர்கள் ஜி.கே.முரளி, சி.கே.எஸ். வினோத்குமார், சி.கே.ஜி.விஜயகுமார் மற்றும் பி.எஸ்.பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story