தினத்தந்தி புகார் பெட்டி


அரியலூர்
x
அரியலூர்
தினத்தந்தி 18 Dec 2021 12:31 AM IST (Updated: 18 Dec 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், காருகுடி கிராமத்தில் உள்ள ஒரு பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது.  இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் தேங்கி நின்ற இடத்தில் மண்ணை கொட்டி சரிசெய்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், காருகுடி, திருச்சி. 
திருச்சி காட்டுப்புத்தூர் அருகே உள்ள எம். களத்தூரில் மருதம்பட்டி செல்லும் சாலை அமைக்கப்பட்டுள்ள  மின்கம்பம் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது என தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த மின்சார வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் , நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், எம்.களத்தூர், திருச்சி. 
திருச்சி  மாவட்டம், தொட்டியம் வட்டம். எம். களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேய்க்கல் நாயக்கன் பட்டி கிராமத்தில் திருச்சி-சேலம் பிரதான சாலையின் அருகே வாரச்சந்தையில் குப்பைகள் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் இருப்பதாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றினர். இதற்கு பொதுமக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், மேய்க்கல் நாயக்கன்பட்டி, திருச்சி.

விபத்து ஏற்படுத்த காத்திருக்கும் மின்மாற்றி
பெரம்பலூர் கிரீன் சிட்டி நகர் செல்லும் எளம்பலூர் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்படுவதுடன் அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் சேதம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கீரீன்சிட்டி நகர், பெரம்பலூர்.

தார் சாலை அமைக்க வேண்டும் 
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, அருத்தோடிப்பட்டி சாலையில் இருந்து பாப்பாப்பட்டி சாலையில் இணையும் வடுவக்கோன்தெரு சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழை பெய்யும்போது இந்த சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சேக் பகுர்தீன், அருத்தோடிப்பட்டி, புதுக்கோட்டை. 

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? 
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம் வெற்றியூர் கிராமத்தில் சிலர் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பள்ளி வாகனம், விவசாய இயந்திங்கள் செல்ல போதுமான அளவிற்கு சாலையில் இடமில்லை.  இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள்,  வெற்றியூர், அரியலூர். 

10 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் நூலகம் 
திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியம், நெய்வேலி ஊராட்சிக்கு உட்பட்ட  நெய்வேலி அரசு நடுநிலைப்பள்ளிக்கு அருகில்  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2006-07ம் ஆண்டில் இருந்து நூலகம் இயங்கி வந்தது. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நூலகத்திற்கு சென்று படித்து பயனடைந்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்த நூலகம் பூட்டி கிடக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும் நூலக கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து பராமரிப்பு இல்லாமல் செடிகள் முளைத்து மோசமான நிலையில் காணப்படுகிறது. 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் இந்த கிராமத்தில் உள்ள மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை வளர்த்து கொள்ள நூலகம் மிக அவசியமானதாகும். எனவே பூட்டி கிடக்கும் நூலகத்தை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சூரியா, நெய்வேலி, திருச்சி. 

குண்டும், குழியுமான தார் சாலை 
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள குந்தாணிபாளையம் நத்தமேடு பகுதியில் இருந்து குளத்துப்பாளையம், காளிபாளையம் வழியாக புங்கோடை செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், குந்தாணிபாளையம், கரூர். 

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் 
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், மணப்பாளையம் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அடிபம்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அடிபம்பில் இருந்து வெளியேறும் நீர் ஓடும் வகையில் முறையான வடிகால் இல்லாததால் குழாயின் அருகே தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மணப்பாளையம், திருச்சி. 


Next Story