பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை


பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 18 Dec 2021 12:36 AM IST (Updated: 18 Dec 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடு்த்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழில் செய்துவரும் தம்பதியரின் 16 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 26) என்ற வாலிபர் பள்ளி மாணவியான அந்தச் சிறுமியிடம் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்ட சிறுமி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மகளிர் இன்ஸ்பெக்டர் நாகஜோதி வழக்கு பதிவு செய்து வாலிபர் ரமேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


Next Story