விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2021 8:10 PM GMT (Updated: 17 Dec 2021 8:10 PM GMT)

அம்மாப்பேட்டையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்மாப்பேட்டை:
அம்மாப்பேட்டையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டம்
அம்மாப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்புதமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், விவசாய சங்க மாவட்ட பொறுப்பு செயலாளர் சாமு.தர்மராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பாலு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய துணைச்செயலாளர் எஸ்.எம்.குருமூர்த்தி, மாதர் சம்மேளனம் ஒன்றிய செயலாளர் பி.தாமரைச்செல்வி மற்றும் பலர் கலந்துகொண்டனர். அப்போது விவசாயிகள் பொட்டாஷ் உரம் மற்றும் நெற்பயிர்களை கையில் ஏந்தியபடி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
உரவிலையை கட்டுப்படுத்த வேண்டும்
பொட்டாஷ், டி.ஏ.பி. உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், தனியார் கடைகளிலும் தட்டுப்பாடின்றி கிடைக்கவும்,  உர விலையை கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மாப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீடு செய்து காப்பீடு தொகை வழங்காமல் நிலுவையில் உள்ள 13 விவசாயிகளுக்கு உடனடியாக பயிர் காப்பீடு தொகையை வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  சம்பா, தாளடி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மழை வெள்ளம் பாதிப்பால் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story