முன்னாள் மத்திய மந்திரி ஆர்.எல்.ஜாலப்பா மரணம்
உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய மந்திரி ஆர்.எல்.ஜாலப்பா மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சித்தராமையா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோலார் தங்கவயல்:
ஆர்.எல்.ஜாலப்பா மரணம்
ேகாலாரில் உள்ள ஜாலப்பா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், முன்னாள் மத்திய மந்திரியாகவும் இருந்தவர் ஆர்.எல்.ஜாலப்பா. அவருக்கு வயது 96. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 10-ந்தேதி ஜாலப்பா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்த உறைந்து இருந்ததால், டாக்டர்கள் தீவிர சிகிச்ைச அளித்து வந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
ஆனாலும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் ஜாலப்பாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி ஆர்.எல்.ஜாலப்பா மரணம் அடைந்தார். இதனை மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பசவராஜ் பொம்மை இரங்கல்
ஜாலப்பாவின் மறைவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் ெபாம்மை, சித்தராமையா, டி.ேக.சிவக்குமார், எடியூரப்பா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த ஜாலப்பா, கர்நாடகத்தின் முக்கியமான தலைவராக வலம் வந்தார். நாடாளுமன்றத்துக்கு 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் மத்திய ஜவுளித்துறை மந்திரியாக பணியாற்றினார்.
வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஜாலப்பா ஒதுங்கியே இருந்து வந்தார். ஆர்.எல்.ஜாலப்பாவின் இறுதிச்சடங்கு இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
கண்கள் தானம்
மறைந்த முன்னாள் மத்திய மந்திரி ஜாலப்பா, தனது கண்களை தானம் ெசய்வதாக தெரிவித்து இருந்தார். அதன்படி, அவர் மரணம் அடைந்த பின்னர், டாக்டர்கள் அவரது கண்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றி தானமாக பெற்றுக்கொண்டனர்.
மேலும் அவரது கண்களை, வேறொருவருக்கு பொறுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
Related Tags :
Next Story