தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
மதுரை மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 114 பவுன் நகை, பணத்தையும் மீட்டனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 114 பவுன் நகை, பணத்தையும் மீட்டனர்.
தொடர் திருட்டு
மதுரை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஊமச்சிகுளம் உட்கோட்டத்தில் உள்ள கருப்பாயூரணி, சிலைமான், ஒத்தக்கடை போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த திருட்டு, வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, மதுரை கல்மேடு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 34) மற்றும் அவரது உறவினரான கருப்பபிள்ளையேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பழனி முருகன் (24) ஆகியோருக்கு மதுரையின் பல இடங்களில் நடந்த திருட்டு வழக்குகளில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேர் மீதும் 17 வழக்குகள் பதிவாகி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
114 பவுன் நகை மீட்பு
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 114 பவுன் நகை, 300 கிராம் வெள்ளிப் பொருட்கள், 300 கிராம், ரூ.2 லட்சம் ரொக்கம், எல்.இ.டி.டிவி, திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.
இந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடித்த தனிப்படையினரான ஒத்தக்கடை சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டி, தலைமை காவலர் காந்தி ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
Related Tags :
Next Story