போலி ஆவணம் தயாரித்து நில மோசடி; 2 பேர் கைது


போலி ஆவணம் தயாரித்து நில மோசடி; 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2021 3:00 AM IST (Updated: 18 Dec 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் அண்ணா நகர் காலனியைச் சேர்ந்தவர் மகாராஜன் (வயது 40). இவருடைய மனைவிக்கு சொந்தமான 5 சென்ட் நிலம், நெல்லையை அடுத்த மூன்றடைப்பு மேலூர் ஜெ.ஜெ.நகரில் உள்ளது.

இந்த நிலத்தை மூன்றடைப்பு மேலூர் ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ் (23) என்பவர் மகாராஜனின் மனைவி போன்று மற்றொருவரின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து நிலமோசடி செய்ததாகவும், இதற்கு முத்து மாரியம்மாள், ஆறுமுகம், ஜெயக்குமார் ஆகியோர் உதவியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜ், ஜெயக்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Next Story