குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்


குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்
x
தினத்தந்தி 18 Dec 2021 3:06 AM IST (Updated: 18 Dec 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இருந்து குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

களியக்காவிளை:
கேரளாவில் இருந்து குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒமைக்ரான்
கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது ஒரு மாத காலமாக மீண்டும் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் உலகை அச்சுறுத்தி வரும் வேளையில் கேரளாவில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால் குமரி - கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாக குமரிக்கு வந்த பலருக்கு நடத்திய சோதனையில் கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறையினர் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.
பரிசோதனை
அதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வாகனங்களில் கிருமி நாசினியும் தெளித்து வருகின்றனர். 
மேலும் காய்ச்சலுடன் வரும் பயணிகள் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். 
சான்றிதழ்
கேரளாவில் இருந்து குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஆகியோர் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் கட்டாயம் காட்ட வேண்டும் என அறிவுறுத்தப் படுவதோடு, பரிசோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story