இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2021 3:24 AM IST (Updated: 18 Dec 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆண்டிமடம்:
ஆண்டிமடம் அருகே உள்ள சாலைக்கரை பிள்ளையார் கோவிலில் அத்துமீறி புகுந்து சிலைகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, ஆண்டிமடம் நால்ரோடு பகுதியில் இந்து முன்னணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது, கோவில் விவகாரத்தில் சம்பந்தமே இல்லாத மாற்று மதத்தவர் கொடுத்த புகாரை ஏற்காமல் இந்து முன்னணியினர் கொடுத்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்ட நிலையில் வருவாய் கோட்டாட்சியர் சமாதான உடன்படிக்கையில் கையொப்பமிட்ட 8 பேரையும் கைது செய்ய வேண்டும் என்றும், கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு மூளையாக இருந்து செயல்படுத்தியவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும் சாலைக்கரை கிராமத்தில் உள்ள இந்து மதத்திற்கு சொந்தமான அனைத்து கோவில்களின் சொத்துக்களையும் மாற்று மதத்தினரிடம் இருந்து மீட்டுத்தர வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் தாலுகா அலுவலகம் சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அப்போது திடீரென ஒரு மூதாட்டி அருள் வந்து ஆடினார். அருகில் இருந்தவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story