ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது


ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2021 3:24 AM IST (Updated: 18 Dec 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வெங்கடகிருஷ்ணாபுரம் மேலத் தெருவை சேர்ந்தவர் சுபலெட்சுமி(வயது 24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது ஸ்கூட்டரில் அரியலூருக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அரியலூர் உழவர் சந்தையை கடந்து வந்தபோது, பின்னால் வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சுபலெட்சுமியின் ஸ்கூட்டர் சேதமடைந்தது.
இதையடுத்து ஸ்கூட்டரை சரி செய்து தரும்படி சுபலெட்சுமி அய்யப்பனிடம் கேட்டுள்ளார். அதற்கு அய்யப்பன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் சரி செய்யாதநிலையில் சுபலெட்சுமி அய்யப்பனிடம் தனது ஸ்கூட்டரை சரி செய்து தருமாறு மீண்டும் கேட்டுள்ளார். அப்போது அய்யப்பன், அவரது உறவினர் காமராஜ் ஆகியோர் சேர்ந்து சுபலெட்சுமியை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கயர்லாபாத் போலீசில் சுபலெட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி வழக்குப்பதிந்து அய்யப்பன், காமராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story