புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 18 Dec 2021 3:24 AM IST (Updated: 18 Dec 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

குளத்தை தூர்வார வேண்டும்
அ௫மநல்லூர் பஞ்சாயத்துக்கு உள்பட்ட விரப்புலி பகுதியில்  குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி விவசாயிகள் பாசனத்துக்கு பயன்படுத்தி வந்தனர். பல ஆண்டுகளாக குளம் ்தூர்வாரப்படாமல் புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே, குளத்தை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். 
           -வே.மணிகண்டன், தடிக்காரன்கோணம்.
பள்ளம் சீரமைக்கப்பட்டது
ராஜாக்கமங்கலத்தில் இருந்து ஈத்தாமொழி செல்லும் மேற்கு கடற்கரை சாலையில் கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் சீரமைக்கப்படாமல் கிடந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைத்தனர். செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
தெருவில் மண்ணரிப்பு
தெங்கம்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சாஸ்தான் கோவில் வடக்கு சாலையில் கனமழையால் வெள்ளம் தேங்கி நின்றது. மேலும், அந்த பகுதியில் உள்ள தெருவுக்குள் வெள்ளம் புகுந்து மண்ணரிப்பு ஏற்பட்டது. தற்போது வெள்ளம் வற்றிய நிலையில் ெதருவுக்குள் செல்லும் நுழைவு பகுதி பள்ளமாக காணப்படுகிறது. இதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                               -முருகன், சாஸ்தான்கோவில்விளை.

சேதமடைந்த டிரான்ஸ்பார்மர்
குளச்சலில் உள்ள கடற்கரை சாலையில் சோதனை சாவடி அருகில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரின் தூண்கள் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் டிரான்பார்மரின் தூண்கள் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த தூண்களை அகற்றி புதிய தூண்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-எஸ்.முகம்மது சபீர், குளச்சல்.
வர்ணம் பூசப்படுமா?
ஆரல்வாய்மொழி நகர பூங்கா திடலில் பாரதியார் நூற்றாண்டு விழா கலையரங்கம் உள்ளது. இந்த கலையரங்கத்திற்கு  பல ஆண்டுகளாக வர்ணம் பூசப்படாமல் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வர்ணம் பூச நடவடிக்ைக எடுக்க வேண்டும்.  
                            -கலையன்பன், ஆரல்வாய்மொழி.
எரியாத விளக்குகள்
ராஜாக்கமங்கலம் சந்திப்பில் இருந்து இரணியல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கணபதிபுரம் பகுதியில் இருந்து எம்.ஜி.ஆர்.நகர் வரை  மின்விளக்குள் எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதை பயன்படுத்தி சமூக விரோத சம்பங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள் நலன் கருதி மின்விளக்குகளை எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                   -இ.மாதவன், எம்.ஜி.ஆர்.நகர்.
விபத்து அபாயம்
மணிக்கட்டி பொட்டல் பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலம் மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்ைக எடுக்க வேண்டும்.        
    -வெ.ரெத்தின பூபதி, மணிக்கட்டிபொட்டல்.
===

Next Story