தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறித்த சினிமா உதவி இயக்குனர் கைது
தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறித்த சினிமா உதவி இயக்குனர் கைது.
சென்னை,
சென்னை மேற்கு மாம்பலம் சீனிவாச அய்யங்கார் முதல் தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 54). இவர் கடந்த மாதம் 25-ந்தேதி அன்று ராமகிருஷ்ணபுரம் 3-வது தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர், விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றார். இதுதொடர்பாக விஜயலட்சுமி, அசோக்நகர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், சென்னை கோடம்பாக்கம் ராஜாராம் திரைப்பட இயக்குனர்கள் காலனியை சேர்ந்த விஜய்பாபு (35) கைது செய்யப்பட்டார். இவர், கோடம்பாக்கம், வடபழனி ஆகிய பகுதிகளில் தனியாக நடந்து சென்ற பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 13 பவுன் தங்கநகைகள், வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில், விஜய்பாபு தன்னை சினிமா உதவி இயக்குனர் என்று கூறியுள்ளார். சினிமா வாய்ப்பு கிடைக்காததால், போதிய வருமானம் இல்லாமல் தவித்ததாகவும், இதனால் வழிப்பறி திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர், எந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்? என்ற விவரங்களை தெரிவிக்கவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story