நாமக்கல் மாவட்டத்தில் 505 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது
நாமக்கல் மாவட்டத்தில் 505 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 505 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 14 கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் 5 லட்சத்து 50 ஆயிரத்து 43 தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 15-ம் கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அரசு பள்ளிகள் என 469 இடங்கள் மற்றும் 36 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 505 முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும். இதில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்து உள்ளார்.
210 டாக்டர்கள்
தடுப்பூசி செலுத்தாதவர்கள் அரசு அளிக்கும் கொரோனா தடுப்பூசியை தயக்கமின்றி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும் என கலெக்டர் கேட்டு கொண்டுள்ளார். இதில் 210 டாக்டர்கள், 430 செவிலியர்கள், 1,400 ஆசிரியர்கள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1,400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி செவிலியர்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் முகாம் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10 லட்சத்து 69 ஆயிரத்து 504 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 6 லட்சத்து 65 ஆயிரத்து 33 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story