தர்மபுரி மாவட்டத்தில் 2 வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்


தர்மபுரி மாவட்டத்தில் 2 வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2021 9:58 AM IST (Updated: 18 Dec 2021 9:58 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று 2 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று 2 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2-வது நாளாக வேலை நிறுத்தம்
தர்மபுரி மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் நேற்று நடந்த 2-வது நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதையொட்டி வங்கி ஊழியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தர்மபுரி ஸ்டேட் வங்கி வளாகம் முன்பு நடைபெற்றது. 
இந்த போராட்டத்திற்கு வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி வீரன் தலைமை தாங்கினார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, நிர்வாகிகள் சந்தோஷ், வீரமணி, கலீல் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
பணிகள் பாதிப்பு
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார்மயப்படுத்த கூடாது. வங்கிகளில் பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வாராக் கடன்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளில் நேற்று 2-வது நாளாக வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் வங்கிகள் சார்ந்த பல்வேறு சேவைகள், காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

Next Story