தனியாக நடைபயிற்சி செல்லும் பெண்களிடம் சில்மிஷம் செய்த என்ஜினீயர்


தனியாக நடைபயிற்சி செல்லும் பெண்களிடம் சில்மிஷம் செய்த என்ஜினீயர்
x
தினத்தந்தி 18 Dec 2021 11:05 AM IST (Updated: 18 Dec 2021 11:05 AM IST)
t-max-icont-min-icon

ஆலந்தூரில் அதிகாலையில் தனியாக நடைபயிற்சி செல்லும் பெண்களிடம் சில்மிஷம் செய்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த ஆலந்தூரில் இருந்து வேளச்சேரி வரை உள்ள உள்வட்ட சாலையில் அதிகாலையில் பொதுமக்கள் நடைபயிற்சி சென்று வருகின்றனர். கடந்த சில தினங்களாக புழுதிவாக்கம் பகுதியில் தனியாக நடைபயிற்சி செல்லும் பெண்களிடம் அத்துமீறி வாலிபர் ஒருவர் சில்மிஷம் செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விடுவதாக மடிப்பாக்கம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. 

இதையடுத்து அந்த பகுதியில் மடிப்பாக்கம் போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர். அப்போது வழக்கம்போல் ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்து சென்ற வாலிபரின் மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து மடிப்பாக்கம் கைவேலி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த ஆதம் அலி (வயது 27) என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். 

இது தொடர்பாக ஆதம் அலியிடம் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர். மாங்காடு பகுதியிலும் இதுபோல் தனியாக செல்லும் பெண்களிடம் அத்துமீறியதாக ஆதம் அலி மீது வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story