கொரடாச்சேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி தொடக்கம்


கொரடாச்சேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 18 Dec 2021 5:49 PM IST (Updated: 18 Dec 2021 5:49 PM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது.

கொரடாச்சேரி:-

கொரடாச்சேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது. 

இடிக்கும் பணி

நெல்லை மாவட்டத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 
இந்த நிலையில் கொரடாச்சேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பயன்பாடற்ற பழைய கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்துவதற்காக ஏற்கனவே உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. அதனை உடனடியாக இடித்து அகற்ற ஒப்பந்ததாரர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் பேரில் நேற்று பள்ளியில் பயன்பாடு இல்லாத சேதம் அடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது. 

ஆய்வு

முன்னதாக கட்டிடத்தில் இருந்த பழைய பொருட்கள், கதவு மற்றும் ஜன்னல்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இடிபாடுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 
இதுபோல் கொரடாச்சேரி ஒன்றியத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story