மார்கழி மாத பவுர்ணமி பூஜை
மார்கழி மாத பவுர்ணமி பூஜை
கோத்தகிரி
கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதும் ஆகும். இந்த கோவிலில் சதுர்த்தி, பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் மார்கழி மாத பவுர்ணமி நாளான நேற்று காலை 10 மணிக்கு முழுமதி ஶ்ரீ கருமாரியம்மன் மகளிர் வழிபாட்டு மன்றத்தின் சார்பில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story